இந்தியாவை மிகுந்த ஆபத்தான கட்டத்தை நோக்கித் தள்ளுகிற பிஜேபியின் மோடி அரசும், இந்திய தேர்தல் ஆணையமும்:

இஸ்லாமிய தலித் வெறுப்பின் உச்சம்

இந்தியாவை மிகுந்த ஆபத்தான கட்டத்தை நோக்கித் தள்ளுகிற பிஜேபியின் மோடி அரசும், இந்திய தேர்தல் ஆணையமும்

இரண்டு வாரங்களுக்கு முன்னால் சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதியிலிருக்கிற இஸ்லாமியர் சிலரின் பெயர் வாக்களார் பெயர் பட்டியலில் நீக்கப்பட்டிருப்பதை ஒரு புகாராக தமிழக தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து அதே தொகுதியில் வேறு யாருடைய பெயராவது நீக்கப்பட்டிருக்கிறதா என்று விசாரித்த பொழுது மிகவும் அதிர்ச்சிகரமான ஒரு உண்மை தெரியவந்திருக்கிறது. அது என்னவென்றால் கிட்டதட்ட 10,000வாக்களர்களின் பெயர் ஒரே தொகுதியிலிருந்து மட்டும் நீக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. இதில் இன்னும் அதிர்ச்சியான செய்தி என்னவென்றால் அனைவரும் இஸ்லாமியர்கள் என்பது தான். https://www.moneycontrol.com/news/politics/over-10000-muslim-voters-missing-from-electoral-rolls-in-tamil-nadus-harbour-assembly-3718571.html?fbclid=IwAR27Y9P6VXYB2Cs06CBSDtYPD3Q8BEIms86O-J6ZwJ7P4R7N4I4iNlOWEEA

ஒரு சட்டமன்ற தொகுதியிலேயே இவ்வளவு பேரை நீக்கியிருக்கின்றார்களென்றால் தமிழகம் முழுமையும் கணக்கெடுத்தால் எவ்வளவு இருக்குமென்று நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது. நியாயப்படி தமிழக தேர்தல் ஆணையம் இந்த செய்தி கிடைத்தவுடன் இதுகுறித்து ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும்.ஆனால் இதுவரை அவர்கள் எந்த நடவடிக்கையும் நடக்கவில்லை. இது பெருத்த சந்தேகத்தை எழுப்புகிறது.

சரி தமிழகத்தில் தான் இப்படியா என்றால்? இந்தியா முழுமைக்கும் இதே நிலைமை தான் என்று அடுத்த அதிர்ச்சி குண்டை தூக்கிப்போடுகிறார்கள் Missing Voter list app என்ற தனியார் இணையசேவை நிறுவனத்தை சேர்ந்தவர்கள். இந்த இணைய சேவையை உருவாக்கிய காலித் சபிபுல்லா இந்தியா முழுமைக்கும் கிட்டதட்ட 13கோடி பேரின் பெயரை வாக்காளர் பெயர் பட்டியலிருந்து சமீபத்தில் பிஜேபி அரசின் துணையோடு இந்திய தேர்தல் ஆணையம் நீக்கியிருக்கிறது. இதில் மிகமுக்கியமானது நீக்கப்பட்ட பெரும்பான்மையானவர்கள் முஸ்லீம்கள், தலித்துகள் மற்றும் பழங்குடிகள் ஆவார்கள் என்று ஆதாரத்தோடு செய்திகளை வெளியிட்டுள்ளார்.  https://www.bloombergquint.com/elections/elections-2019-are-nearly-13-crore-voters-missing-from-indias-electoral-rolls?fbclid=IwAR39vd7GDBe1ysoyVMnnK1YIV3s57nV9eEu-t0by6QdMCBxP-LF9SnemuDQ

மேலும் அவர் இவர்களெல்லாம் ஏனோ தானோ என்று நீக்கப்படவில்லை நன்கு திட்டமிட்டு எந்த தொகுதியிலெல்லாம் வெற்றி வாய்ப்பை தீர்மானிகக்க்கூடியவர்களாக இஸ்லாமியர்களும் தலித்துகளும் பழங்கடியினரும் இருப்பார்களோ அந்தந்த தொகுதிகளில் கடந்த கால ஓட்டுபதிவு மற்றும் கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றை வைத்துக்கொண்டு நீக்கியிருக்கிறார்கள். அதிகப்பட்சமாக மகாராஷ்டிராவில் 40லட்சம் (39,27,882) பேரின் ஓட்டை நீக்கியிருக்கிறார்கள். இது அந்த மாநிலத்தின் 4.4%வாக்கு வங்கி ஆகும். இது அங்கு பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கக்கூடிய சக்தியாகும். https://www.news18.com/…/names-of-nearly-40-lakh-maharashtr…

மேலும் இங்கு ஆட்சியிலிருக்கிற பிஜேபி அரசு உரிமைக்காக போராடிய தலித்துகளின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி தூப்பாக்கிசூடு நடத்தி கொலை செய்தது, காடுகளில் வாழும் விவசாய பழங்குடிகளை வெளியேற வைத்தது, இஸ்லாமிய வெறுப்பு உள்ளிட்டவைகளால் இவர்கள் யாரும் பிஜேபிக்கு வாக்களிக்க மாட்டார்கள் எனவே இங்கு மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வரவே வராதென்று அனைத்து கருத்து கணிப்புகளும் வெளிவந்திருக்கிற சூழலில் இவ்வளவு பேரை குறிவைத்து நீக்கியிருக்கிறது தேர்தல் ஆணையமென்றால் இது ஏதேச்சையாக நடந்ததாக எடுத்துக்கொள்ளமுடியாது. அடுத்ததாக தெலுங்கானவில் 22லட்சம் பேரின் பெயரை நீக்கியிருக்கிறது. அதுவும் இவர்கள் அனைவரும் கடந்த வருடம் 2018இல் நடந்த தெலுங்கான சட்டமன்ற தேர்தலில் வாக்களித்தவர்கள். மூன்று மாதங்களில் இவர்களின் பெயரை நீக்கியிருக்கிறார்களென்றால் எப்படி நடந்தது இது? இதேபோலத்தான் இந்தியாவெங்கும் பிஜேபியின் துணையோடு தேர்தல் ஆணையம் செயல்பட்டு ஒட்டுமொத்த ஓட்டு போடுபவர்களில் 12% பேரை முறையான வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் நீக்கியிருக்கிறது. https://www.ucanews.com/news/muslims-dalits-wiped-from-indian-electoral-rolls/84817?fbclid=IwAR2zBtn7wWbDVs9JAg5vOxfNaOSbAM3uB1KrCPLCDJdX5uaCx5T9shILO8M

இது வெறும் தேர்தல் வெற்றிக்காக என்று மட்டும் கருதினோமென்றால் நாம் ஏமாளிகளாவோம். அதையும் தாண்டி பிஜேபியின் தாய் அமைப்பும் தத்துவ அமைப்புமான ஆர்.எஸ்.எஸின் நோக்கமே இஸ்லாமியர்கள் நீங்கிய அகண்ட பாரதம் தான். அந்த ஆபத்தான செயல்திட்டத்திற்கான முதல்படியாகவே இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கிற அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமையை முதல்கட்டமாக பிஜேபி அரசு அவர்களிடமிருந்து பிடுங்கியிருக்கிறது. இது 1947இல் நடந்ததை போன்ற இரத்தகளரிக்கு பிஜேபி அரசு அடிபோடுகிறதோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறது. அப்படியென்று நடந்தால் இந்திய ஒன்றியம் மிகமோசமான ஆபத்தை சந்திக்கும் அதற்கு முழு காரணமும் பிஜேபியும் அதன் தாய் அமைப்பான ஆர்,எஸ்.எஸ் தான்.

Leave a Reply