திருமுருகன் காந்தி அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் இந்துத்துவ கும்பல்களுக்கு எதிராக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார்

- in இந்துத்துவா

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களுக்கு தொடர்ச்சியான கொலை மிரட்டல்களை விடுத்து வரும் இந்துத்துவ கும்பல்களுக்கு எதிராக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ச்சியாக இந்த கும்பல் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி வருவது குறித்தும், திருமுருகன் காந்தி அவர்களின் பெயரை பொய்யாக மாற்றி டேனியல் என்று சொல்லி மதக் கலவரத்தை தூண்டும் நோக்குடன் செயல்பட்டு வரும் நபர்கள் மீதும் புகார் அளிக்கப்பட்டது.
மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் பிரவீன்குமார், லெனாகுமார் மற்றும் வழக்கறிஞர்கள் இப்புகாரினை ஆணையரிடம் கையளித்தனர்.

Leave a Reply