தோழர் முகிலன் எங்கே? தமிழக அரசே பதில் சொல்! – சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

ஸ்டெர்லைட் படுகொலை குறித்த ஆவணங்களை கடந்த பிப்ரவரி 15 அன்று வெளியிட்ட சூழலியல் போராளி தோழர் முகிலன் அன்றிரவே காணமல் போனார். அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தமிழக அரசின் மெத்தன போக்கை கண்டித்து, தோழர் முகிலன் எங்கே? தமிழக அரசே பதில் சொல்! என்ற முழக்கத்தோடு 27-02-2019 அன்று மாலை சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தோழர் முகிலன் காணாமல் போனதிற்கு எடப்பாடி அரசும், காவல்துறையுமே பொறுப்பு என்ற கண்டன முழக்கங்களோடு துவங்கிய ஆர்பாட்டத்தில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கினைப்பாளார் தோழர் அருள்முருகன் துவக்க உரையாற்றினார்.

தொடர்ந்து,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் ஆளுர் ஷாநவாஸ்,
தமிழர் விடுதலை கழகத்தின் தோழர் சௌ.சுந்தரமூர்த்தி,
டிசம்பர் 3 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் தீபக்,
தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை.திருவள்ளுவன்,
SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தோழர் ஆ.சா.உமர் பாருக்,
தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் டைசன்,
விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன்,
பச்சைத் தமிழகம் கட்சியின் தோழர் அருள்,
ஆதித்தமிழர் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் திருமுருகச்செல்வன்,
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசி குமரன்,
மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் தோழர் பெரியசாமி,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைமைக் கழக பேச்சாளர் தோழர் பிஸ்மில்லா கான்,
மக்கள் பாதையின் தோழர் உமர் முக்தார்,
தமிழக தேசிய முன்னணியின் தலைவர் தோழர் பொழிலன்,
தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் கோவை.ராமகிருஷ்ணன்
ஆகியோர் உரையாற்றினர்.

இறுதியாக உரையாற்றிய மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, தோழர் முகிலன் காணாமல் போனதிற்கு பின்னால் தமிழக அரசும் காவல்துறையும் இருப்பாதாக அம்பலப்படுத்தினார். மேலும், தோழர் முகிலன் காணாமல் போன விவகாரத்தில் மௌனம் காக்கும் தமிழக கட்சிகளை கேள்விக்குள்ளாக்கினார்.

Leave a Reply