ஸ்டெர்லைட் படுகொலையின் புதிய ஆதாரத்தை வெளியிட்ட தோழர் முகிலன் எங்கே? தமிழக அரசே பதில் சொல்!

ஸ்டெர்லைட் படுகொலையின் புதிய ஆதாரத்தை வெளியிட்ட தோழர் முகிலன் எங்கே? தமிழக அரசே பதில் சொல்!

ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறையை திட்டமிட்டு ஏவி துப்பாக்கிச் சூட்டை காவல்துறையே நடத்தியது எனும் ஆதாரத்தினை CCTV காட்சிகள் வழியாக 15-2-2019 அன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வெளியிட்ட சூழலியல் போராளி தோழர் முகிலன் அன்று இரவிலிருந்து காணாமல் போயிருக்கிறார்.CCTV கேமராக்களை உடைத்தது யார்? வாகனங்களுக்கு தீ வைத்தது யார்? ஆவணங்களை மாற்றி சமர்ப்பித்த அதிகாரிகள், தென்மண்டல ஐஜி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்தும் பல ஆதாரங்களை அவர் வெளியிட்டிருந்தார்.

ஆதாரங்களை வெளியிட்டுவிட்டு ரயிலில் புறப்பட்ட அவரது தொலைபேசி திண்டிவனம் அருகே சென்ற போது தொடர்பு துண்டிக்கப்பண்டிருக்கிறது.தற்போது வரை தோழர் முகிலன் எங்கே என்பது தெரியவில்லை.

மக்கள் போராளியான தோழர் முகிலன் கடத்தப்பட்டிருக்கிறாரா? யார் அவரை கடத்தியது? அவர் எங்கே? எனும் கேள்விகளுக்கு தமிழக அரசு உடனடியாக பதில் சொல்லியாக வேண்டும் என்பதை மே பதினேழு இயக்கத்தின் சார்பாக முன்வைக்கிறோம். முகிலன் அவர்களின் பாதுகாப்பிற்கு ஏதேனும் நிகழ்ந்தால், அதற்கு தமிழக அரசே பொறுப்பு என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜனநாயக இயக்கங்களே! தோழர்களே! தோழர் முகிலனுக்காக குரலெழுப்புங்கள்!

தமிழக அரசே! பதில் சொல்! முகிலன் எங்கே?

முகிலனுக்கு பாதுகாப்பு தருவது அரசின் பொறுப்பு!

#WhereIsMugilan?

– மே பதினேழு இயக்கம்
9884072010

 

Leave a Reply