மதுரையில் நடைபெற்ற தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்

மொழிப்போர் ஈகியர் மற்றும் மாவீரர் முத்துக்குமாரின் 10ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம், மதுரை பெத்தானியாபுரம் குரு திரையரங்கம் அருகில், 16-02-2018 அன்று மாலை மே 17 இயக்கம் சார்பாக நடைபெற்றது.

பறையிசையுடன் துவங்கிய பொதுக்கூட்டத்தில், மொழிப்போர் ஈகியர், செங்கொடி மற்றும் மாவீரர் முத்துக்குமார் ஆகியோர் நினைவாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, அவர்களது உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மே பதினேழு இயக்கத் தோழர்கள் மெய்யப்பன், மகாமணி, முகிலன் ஆகியோர் உரையாற்றினர். தொடர்ந்து மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் புருசோத்தமன், பிரவீன் குமார் மற்றும் தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன் ஆகியோர் உரையாற்றினர்.

இறுதியாக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பாஜக அரசின் இந்துத்துவ பாசிச பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தி உரையாற்றினார்.

 

 

Leave a Reply