தமிழக ஆளுநரே! 28 ஆண்டுகளாக செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடும் எமது 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்

தீர்ப்பு எழுதிய நீதிபதி சொல்லிவிட்டார் இவர்களை விடுவிக்கலாமென்று !

விசாரித்த விசாரணை அதிகாரிகள் சொல்லி விட்டார்கள் இவர்களை விடுவிக்கலாமென்று !

மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது இவர்களை விடுதலை செய்யலாமென்று !

8 கோடி தமிழர்களின் ஆதரவில் இயங்கும் தமிழ்நாடு சட்டசபை தீர்மானம் சொல்லிவிட்டது இவர்களை விடுதலை செய்யலாமென்று !

இத்துணை பேரும் சொல்லியும் இன்னும் ஆளுநர் செவிசாய்க்க மறுப்பது சட்டவிரோதமானது என்பதை உலகுக்கு உணர்த்தவே வேலூர் சிறையில் முருகன் அவர்களும் நளினி அவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். அவர்கள் கோரிக்கையை தமிழக ஆளுநர் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

தமிழக ஆளுநரே! 28 ஆண்டுகளாக செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடும் எமது 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்.

மே 17 இயக்கம்.

Leave a Reply