திருப்பூரில் மோடியை எதிர்த்து நடைபெற்ற கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

மோடியின் தமிழக வருகையை எதிர்த்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று (10-02-2019) நடத்தப்பட்டது.

இதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும், பெரும் திரளான தோழர்களும் கலந்து கொண்டு மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடியுடன் #GobackModi என்று முழக்கங்களை எழுப்பினர்.

பாஜக கொடி கிழித்தெறியப்பட்டது. கருப்பு பலூன்கள் பறக்க விடப்பட்டன.

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர்களும் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை காவல்துறை கைது செய்தது. 700 க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூருக்கு வந்து போராட்டத்தை நடத்திப் பாருங்கள் என்று சவால்விட்ட காவிகளுக்கு, கருப்பு சட்டைகளின் போராட்டம் மிரட்டலைக் கொடுத்திருக்கிறது.

Leave a Reply