உலக புற்றுநோய் எதிர்ப்பு தினமும் சில புரிதல்களும்

உலக புற்றுநோய் எதிர்ப்பு தினமும் சில புரிதல்களும்

பிப்ரவரி 4 உலக புற்றுநோய் எதிர்ப்பு தினமாக ஐநாவால் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடத்தில் ‘நம்பிக்கை கொள்வோம் புற்று நோயிலிருந்து விடுதலை பெறுவோம்’ என்ற ஒரு முழக்கத்தை வைத்து புற்றுநோய் எதிர்ப்பு தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நிதர்சனத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது மருத்துவமனைகள் அனைத்தையும் தனியார் மயமாக்க வேண்டும் என்று உலக பொது வர்த்தக கழகத்தின் மூலம் அனைத்து நாடுகளுக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டு கிட்டத்தட்ட அது நடைமுறைக்கு எல்லா நாடுகளிலும் வரத்தொடங்கிவிட்டது.

புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்க்கு உள்ளாகிற ஒருவர் அந்த நோயை சரி செய்வதற்காக 5 லிருந்து 15 லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டிய ஒரு சூழல் இருக்கிறது. இவ்வளக்கும் பிறகும் இந்த நோய் முழுமையாக குணமடையும் என்பது சந்தேகமே. இவ்வளவு தொகையை செலவழிக்க முடியாதவர்களுக்கு மரணத்தை மட்டுமே கொடுத்துக்கொண்டிருக்கிற சூழலை இதே சர்வதேச அமைப்புகளே உருவாக்கிவிட்டு அவர்களே புற்றுநோயை ஒழிப்போம் என்று ஒரு தினத்தை கடைபிடிப்பது முரணானது ஆகும்.

இந்தியாவைப் பொறுத்தவரை பணம் படைத்தவர்கள் தங்களுக்கு சிறு நோய் ஏற்பட்டாலும் இந்தியாவில் அனைத்து வசதிகளும் உடைய எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளைக்கூட நாடாமல் அமெரிக்காவிற்கு பறந்து சென்று விடுகிறார்கள். உதாரணத்திற்கு அருண் ஜெட்லி, மனோகர் பரிக்கர், சோனியா காந்தி.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் புற்றுநோயை ஒழிப்போம் என்று ஒரு தினத்தை கடைபிடித்து அதற்கு ஊர்தோறும் விளம்பரம் செய்வது யாரை ஏமாற்றுவதற்காக. உண்மையிலேயே இவர்களுக்கு புற்றுநோயை அழிக்க வேண்டுமென்ற அக்கறை இருந்தால் புற்று நோயை உருவாக்கும் அணு உலைகள் போன்ற ஆபத்தான ஆலைகளை அமைக்காமல் தடுத்து நிறுத்தும் சட்டங்களை இயற்றி இருக்க வேண்டும். மேலும் ஏழை,எளிய மக்களும் இந்த நோயில் இருந்து விடுபடுவதற்கு வசதியாக அரசு மருத்துவமனைகளில் இதற்கான உரிய தரமான சிகிச்சை அளிக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும். இதையெல்லாம் செய்திருந்தால் நம்பிக்கை கொள்வோம் புற்று நோயிலிருந்து விடுதலை பெறுவோம் என்று ஒரு முழக்கத்தை வைத்து ஒரு தினத்தை கொண்டாடுவதில் அர்த்தம் இருக்கும். அது இல்லாவிடில் வெறும் பேப்பரில் புற்றுநோய் என்று எழுதி அதை அழிப்பதற்கு சமம் தான் இவர்கள் கொண்டாடும் இந்த தினமும்.

Leave a Reply