கதிராமங்கலம் மக்களுக்கு குரல் கொடுக்கச் சென்ற பேராசிரியர் த.செயராமன் அவர்களை உடனே விடுதலை செய்!

கதிராமங்கலம் மக்களுக்கு குரல் கொடுக்கச் சென்ற பேராசிரியர் த.செயராமன் அவர்களை உடனே விடுதலை செய்! – மே பதினேழு இயக்கம்

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எண்ணெய் துரப்பணப் பணியினை எதிர்த்து கதிராமங்கலம் மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள். இந்நிலையில் இன்று காவல்துறையின் பாதுகாப்புடன் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தினர் வாகனங்களில் வந்து குழாய் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

இதனால் சந்தேகமுற்ற கதிராமங்கலம் மக்கள் அங்கு என்ன வேலை நடக்கிறது என தெரிந்து கொள்வதற்காக அங்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களுடன் வந்த பேராசிரியர் த.செயராமன் அவர்களை எந்த அடிப்படையுமின்றி, கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றிருக்கிறார்கள் காவல்துறையினர். இந்த அராஜகப் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு செயராமன் மற்றும் ராஜூ ஆகியோர் குடந்தை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். எந்த பிரச்சினையும் செய்யாமல் கேள்வி கேட்க சென்றால் கூட சிறை என்பது இங்கு சர்வாதிகார அரசு இருப்பதையே காட்டுகிறது. இந்த நேரத்தில் பேராசிரியர் செயராமன் அவர்களுக்கும், கதிராமங்கலம் மக்களுக்கும் துணை நிற்க வேண்டியது அனைவரின் கடமை.

பேராசிரியர் த.செயராமன் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

– மே பதினேழு இயக்கம்
9884072010

 

Leave a Reply