கொளத்தூரில் நடைபெற்ற மொழிப்போர் ஈகியர் மற்றும் மாவீரர் முத்துக்குமார் நினைவுப் பொதுக்கூட்டம்

இந்தி திணிப்பு போராட்டத்திற்கு எதிரான போரில் உயிர்நீத்த மொழிப்போர் ஈகியர் மற்றும் தமிழீழ விடுதலைக்காக தன்னுயிரை ஈகம் செய்த மாவீரர் முத்துக்குமார் ஆகியோரது நினைவை போற்றும் வகையில், சென்னை கொளத்தூர் திரு.வி.க.நகர் அகரம் சந்திப்பு அருகே மே பதினேழு இயக்கத்தின் சார்பாக வீரவணக்கப் பொதுக்கூட்டம் முத்துக்குமாரின் 10ம் ஆண்டு நினைவு நாளான 29-01-2019 அன்று நடைபெற்றது. பறையிசை மற்றும் சிலம்பாட்டத்துடன் துவங்கிய கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். பின்னர் முத்துக்குமார், செங்கொடி மற்றும் மொழிப்போர் ஈகியர் புகைப்படங்கள் முன்பாக வைக்கப்பட்டிருந்த நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்த்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மே பதினேழு இயக்கத் தோழர் கொண்டல்சாமி துவக்க உரையாற்றினார். தொடர்ந்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் பிரவீன் குமார் மற்றும் லெனா குமார் உரையாற்றினர். இறுதியாக உரையாற்றிய மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, மொழிப்போர் குறித்தான வரலாற்றையும், தமிழீழ இனப்படுகொலையில் காங்கிரஸ் மற்றும் திமுகவின் பங்கை விளக்கி தோலுரித்து காட்டினார். இதனிடையே பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்திருந்த வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

Leave a Reply