மாவீரர் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம்

விதியே விதியே என்செய்ய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை என்று 2009இல் இந்தியாவின் துணையோடு இலங்கை அரசு தமிழர்களை இனப்படுகொலை செய்த பொழுது, அதை தடுக்க வலியுறுத்தி தனது உயிரை ஆயுதமாக கொடுத்து, என் எதிர்கால இளைஞர்களை அறிவாயுதம் ஏந்துங்கள் என்று அறைகூவல் விடுத்து சென்ற மாவீரன் முத்துக்குமரனின் நினைவை போற்றும் விதமாக மே 17 இயக்கம் அவரது நினைவு நாளான சனவரி 29.01.19அன்று மாலை 5மனிக்கு சென்னை கொளத்தூரிலுள்ள திரு.வி.க நகரில் அகரம் காமராசர் சிலைக்கு அருகில் பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கின்றோம். 

இன்னமும் இனப்படுகொலைக்கான நீதி தமிழர்களுக்கு கிடைக்கவில்லை. இனப் படுகொலை செய்தவர்கள் யாரும் இன்னும் தண்டிக்கப்படவில்லை. சிங்கள இனவெறி கூட்டம் இன்னமும் தமிழர்களுக்கு சொல்லொணாத் துயரத்தை.நிலைமைகள் எதுவும் ஒரு துளி கூட இன்னும் மாறவே இல்லை.

இந்த சூழலிருந்து நாம் எவ்வாறு மீள்வது என்பது குறித்து நாம் பேசுவதற்கான கூட்டத்தைத்தான் ஏற்பாடு செய்திருக்கிறோம். ஆகவே அனைவரும் குடும்பத்தோடு வாருங்கள்.

அறிவாயுதம் ஏந்தி தமிழர்களுக்கான தீர்வை நோக்கி நகர்வோம்.

 

Leave a Reply