தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளை இழுத்து மூட நினைக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சதி

8000 மதிய உணவு மையங்களை மூடும் உததரவை தமிழக அரசே திரும்ப பெறு! காலியாக உள்ள 10 ஆயிரம் சத்துணவு பணியாளர் இடங்களை உடனடியாக நிரப்புக !

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளை இழுத்து மூட நினைக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சதி:

இந்த சதியை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னால் ஒரு சிறு சம்பவத்தை நாம் நினைவு கூறுவது அவசியமாகும். தமிழ்நாட்டின் முதல்வராக காமராஜர் பொறுப்பேற்றபின் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் ஆலோசனையின் பேரில் பார்ப்பனர் ராஜாஜியால் மூடப்பட்ட அனைத்து பள்ளிகளையும் திறந்தார். மேலும் கூடுதலாக பல பள்ளிகளையும் திறந்தார். இதனால் தமிழர்கள் அனைவரும் பாடசாலைக்கு செல்வார்கள் என்று அவர் நம்பியிருந்தார். அந்த வேலையில் ஒரு நாள் ஒரு சுற்றுப் பயணத்தில் இருக்கும் பொழுது அவரது வாகனம் புகைவண்டி நிறுத்தத்தில் நிற்கும் பொழுது ஒரு சிறுவன் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கிறான்.அதை பார்த்த காமராசர் அந்த சிறுவனை அழைத்து ஏம்பா அரசுதான் பள்ளிக்கூடம் திறந்திருக்கே நீ ஏன் பள்ளிக்கூடம் போகாமல் இருக்க என்று கேட்கிறார். அதற்கு அந்த சிறுவன் பள்ளிக்கூடம் திறந்தா போதுமா சாப்பாடு யாரு போடுறது என்று கேட்டுவிட்டு அவன் மாடு மேய்க்க போய்விட்டான். இந்த சம்பவத்திற்கு பிறகு தான் காமராசர் மத்திய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அதற்கு நிதி பற்றாக்குறை ஏற்படும் என்று சொன்னபோது. நான் தெருத்தெருவாக சென்று துண்டேந்தியாவது நிதி சேகரிக்கிறேன் என்று விடாப்படியாக நின்று மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்து அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்தினார் காமராசர். அதன் பின் ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர் அவர்கள் காமராஜர் கொண்டுவந்த சத்துணவுத் திட்டத்தை பத்தாம் வகுப்பு வரை நீடித்தார். இப்படித்தான் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் சேர்க்கை அதிகமாகி தமிழர்கள் அனைவரும் படிக்கும் வாய்ப்பு பெற்றார்கள்.

இப்படி உருவாக்கிய அரசு பள்ளிகளைத் தான் முற்றிலுமாக சிதைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முயன்று வருகிறது. அதாவது தமிழகத்தில் இருக்கிற 43,200 மதிய உணவு வழங்கும் மையங்களில் சுமார் 8000 மையங்களை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதற்கான காரணமாக தமிழக அரசு சொல்வது என்பது இந்த மையங்களுக்கு மத்திய அரசு நபரொருவருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கி வந்தது. ஆனால் போன மாதத்தோடு அந்த தொகையை மத்திய அரசு நிறுத்திவிட்டது. ஆகையால் தமிழக அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்பட்டு விட்டது. அதை சமாளிக்கவே இந்த மையங்களை மூடுகிறோமென்று அறிவித்திருக்கிறது.

அரசின் இந்த நடவடிக்கையினால் இந்த மையங்களில் மூலம் பயன் பெற்று வந்த மாணவர்களின் நிலைமை கேள்விக்குறி ஆனதுடன் எந்த நோக்கத்திற்காக இந்த மதிய உணவு வழங்கும் மையங்கள் காமராஜரால் ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்தையே இந்த நடவடிக்கை சிதைத்துவிடும். அரசு பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைவதன் மூலம் தனியார் பள்ளிகள் பெருகுவதற்கும் லாபம் அடைவதற்கும் தமிழக அரசின் இந்த நடவடிக்கை உதவும். இதற்குத்தான் இப்படி ஒரு நடவடிக்கையை மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுக்கிறதோ என்கிற சந்தேகம் வருகிறது.

ஆகவே இதை தடுக்க தமிழக அரசு உடனடியாக இந்த மையங்களை மூடும் உத்தரவை திரும்ப பெறுவதுடன் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கும் 10,000க்கும் மேற்பட்ட சத்துணவு பணியாளர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டுமென்று மே 17 இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply