திருச்சி கருஞ்சட்டைப் பேரணி மற்றும் தமிழின உரிமை மீட்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு

திருச்சியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் டிசம்பர் 23 அன்று நடைபெறவுள்ள பெரியார் நினைவு கருஞ்சட்டைப் பேரணி மற்றும் தமிழின உரிமை மீட்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று(17-12-2018) சென்னையில் நடைபெற்றது.

இந்த பேரணி மற்றும் மாநாட்டில் இதுவரையில் 160க்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்திருக்கின்றன. தமிழ்நாடு முழுதும் உள்ள பெரியார் கொள்கைகளை ஏற்கும் அனைத்து அமைப்புகளும், படைப்பாளிகளும், செயல்பாட்டாளர்களும், தமிழ் உணர்வாளர்களும் கருப்பு சட்டை அணிந்து இந்த பேரணியில் பங்கேற்கிறார்கள்.

புதன்கிழமை அன்று அனைத்து அமைப்புகளின் பெயர்களையும் உள்ளடக்கிய முழுமையான பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்களும், பெண்களும், மாணவர்களும், இளைஞர்களும் பெருமளவில் திரண்டு இப்பேரணி மற்றும் மாநாட்டில் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட பொறுப்பாளர் உமாபதி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் குமரன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் பொறுப்பாளர் வாலாசா வல்லவன், தமிழர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி, தமிழ்வழி கல்வி இயக்கத்தின் தோழர் சின்னப்ப தமிழர், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி மற்றும் லெனாகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply