நெல்லையில் “தமிழினம் காப்போம்” பொதுக்கூட்டம்

தந்தைப் பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் நடத்தப்படவிருந்த பொதுக்கூட்டதிற்கு காவல்துறை அனுமதி மறுக்க, நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று, “தமிழினம் காப்போம்” என்ற பெயரில் 15-12-2018 அன்று பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லுரி அருகில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்ற இந்த பொதுக்கூட்டம், கஜாப் புயலை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும், ஏழு நிரபராதித் தமிழர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி நடத்தப்பட்டது. பறையிசையுடன் துவங்கிய கூடத்தில், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் புருசோத்தமன் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் அரசினால் படுகொலை செய்யப்பட்ட 14 போராளிகளுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மே பதினேழு இயக்கத் தோழர்கள் மகாமணி, முகிலன் மற்றும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் லெனாகுமார் ஆகியோர் தொடர்ந்து உரையாற்றினர். இறுதியாக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சாதியத்தின் மூலமாக இருக்கும் பார்ப்பனியத்தை அம்பலப்படுத்தி உரையாற்றினார்.

Leave a Reply