அம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டம் – அம்பத்தூர்

அம்பேத்கர் நினைவு நாளையொட்டி “தமிழினம் காப்போம்” என்ற தலைப்பில் மே பதினேழு இயக்கம் சார்பில் உரிமை முழக்கப் பொதுக்கூட்டம் சென்னை அம்பத்தூரில் 09-டிசம்பர்-2018 அன்று நடைபெற்றது. கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவி! ஏழு தமிழரை உடனே விடுதலை செய்! சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்று! என மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அம்பேத்கர், பெரியார், பிரபாகரன் என மூவர் குறித்த பாடல்களை மே பதினேழு இயககத் தோழர்கள் பாட, பறையிசையுடன் பொதுக்கூட்டம் துவங்கியது. சாதி வெறி கூட்டத்திற்கு சவுக்கடி கொடுத்த தோழர் கெளசல்யா அவர்களின் திருமணத்திற்கு அனைவரும் எழுந்து நின்று கை தட்டி வாழ்த்து தெரிவித்தனர். மே பதினேழு இயக்கத் தோழர்கள் மகாமணி, முகிலன், கொண்டல்சாமி, பிரவீன்குமார், திருமுருகன் காந்தி ஆகியோர் பொதுக்கூட்டத்தில் 3 கோரிக்கைகளையும் முன்வைத்து உரையாற்றினர். மனித நேய மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் முகமது அலி, மற்றும் தோழர்கள் ரஹ்மான், சாதிக், கரீம் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்று மே பதினேழு இயக்கத் தோழர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Leave a Reply