”தெளிவுப் பாதையின் நீச தூரம்” திரைப்படம் மீதான தடைக்கு எதிரான பத்திரிக்கையாளர் சந்திப்பு.

”தெளிவுப் பாதையின் நீச தூரம்” திரைப்படம் மீதான தடைக்கு எதிரான பத்திரிக்கையாளர் சந்திப்பு.

கோவையில் 1997ம் ஆண்டு இசுலாமியர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரம் குறித்தான முழுமையான விவரங்களை ஆவணப்படுத்தி இயக்குநர் அரவிந்த் அவர்கள் “தெளிவுப்பாதையின் நீச தூரம்” என்ற திரைப்படத்தினை எடுத்திருந்தார். இந்த திரைப்படத்தினை வெளியிட தணிக்கைக் குழு தடை விதித்துள்ளது. மேலும் இயக்குநர் அரவிந்த் ஏற்பாடு செய்த ப்ரிவியூ திரையிடலுக்கும் காவல்துறை தடை விதித்துள்ளது.

தமிழ்நாட்டில் Crowd Funding முறையில் தயாரிக்கப்பட்ட முக்கியமான சுயாதீன திரைப்படமாக வெளிவரும் இப்படத்தினை தடை செய்வதன் மூலம் தணிக்கைக் குழுவின் இந்துத்துவ பார்ப்பனிய கூட்டம் தனது பாசிச முகத்தினை காட்டியிருக்கிறது.

இந்த படத்தின் மீதான தடையினை நீக்க வலியுறுத்தி இயக்குநர் அரவிந்த் அவர்கள் அரசியல் செயல்பாட்டாளர்களை இணைத்து பத்திரிக்கையாளர் சந்திப்பினை நடத்தினார். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள், இந்த படத்திற்கு தனது ஆதரவினைத் தெரிவித்து, இந்த படம் வெளியிட அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறினார். மேலும் தணிக்கைத் துறையின் மீளாய்வு குழுவின் தலைவராக இருக்கும் நடிகை கெளதமி பதவி விலக வேண்டும் என்றும், இந்துத்துவ ஆதரவு திரைப்படங்களை மட்டுமே வெளியிட வேண்டும் என்ற நோக்கில் இவர்கள் செயல்படுகிறார்களோ என்ற ஐயம் இருப்பதாகவும் தெரிவித்தார். கோவைக் கலவரத்தின் போது தமிழ் வணிகர்கள் அப்புறப்படுத்தப்பட்டு வட மாநில மார்வாடி வணிகர்கள் ஆக்கிரமிக்க இந்துத்துவ கும்பல் வேலை செய்ததைக் குறித்தும் பேசினார்.

Leave a Reply