டிசம்பர் 3 இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற ”மாற்றுத்திறனுடையோரின் அரசியல் மாநாடு” – மே 17 இயக்கம் பங்கேற்பு

”மாற்றுத்திறனுடையோரின் அரசியல் மாநாடு” சென்னையில் டிசம்பர் 3 இயக்கத்தின் சார்பில் இன்று (30-11-2018) நடைபெற்றது.

”மாற்றுத்திறனுடையோரின் குரலும், அரசியல் பிரதிநிதித்துவ உரிமையும் சமூக நீதியே!” எனும் தலைப்பில் இந்தியாவில் முதல் முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு கேட்டு இந்த மாநாடு நடைபெற்றது.

இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மாற்றுத் திறனாளர் தோழர்களின் அரசியல் எழுச்சிக்கு மே பதினேழு இயக்கம் தனது வாழ்த்துகளையும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த முன்னெடுப்பினை மேற்கொண்டிருக்கிற டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் முனைவர் தீபக் அவர்களுக்கும், டிசம்பர் 3 இயக்கத்தின் தோழர்களுக்கும் வாழ்த்துகளை மே பதினேழு இயக்கம் தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply