டிச. 24, 2018 திருச்சியில் கூடுவோம் – பெரியார் நினைவு கருஞ்சட்டை பேரணி

பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 அன்று திருச்சியில் அனைத்து பெரியாரிய-தமிழ்த்தேசிய-அம்பேத்கரிய-முற்போக்கு இயக்கங்கள் இணைந்து நடத்தும் தமிழின உரிமை மீட்பு மாபெரும் கருஞ்சட்டைப் பேரணி மற்றும் மாநாடு.

இந்த பேரணி மற்றும் மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நவம்பர் 10 சென்னை நிருபர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

இதில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், புதுச்சேரி மாநில திவிக தலைவர் லோகு அய்யப்பன், தமிழப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் அரங்க குணசேகரன், ஆதித் தமிழர் பேரவையின் மாநில மகளிரணி செயலாளர் செங்கை குயிலி மற்றும் பொறியியலாளர் அணி செயலாளர் எழில் புத்தன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் தோழர் வாலாசா வல்லவன், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டைசன், அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கத்தின் தோழர் தெய்வமணி, டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் முனைவர் தீபக் மற்றும் சரவணன், பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தீனா, தாளாண்மை உழவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கோ.திருநாவுக்கரசு, தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் கா.சு நாகராசன், தமிழர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி, தமிழக மக்கள் முன்னணியின் தோழர் செல்வமணி, இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில், திவிக தலைமை நிலைய செயலாளர் தபசிகுமரன், தபெதிக சென்னை மாவட்ட தலைவர் குமரன், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி, அருள்முருகன், லெனாகுமார் மற்றும் பிரவீன்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

டிசம்பர் 24, திருச்சியில் திரள்வோம்!
பெரியார் நினைவு நாளில் தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து பெரியாரிய-தமிழ்த்தேசிய-அம்பேத்கரிய-முற்போக்கு இயக்கங்களும் இணைந்து நடத்தும் மாபெரும் “தமிழின உரிமை மீட்பு” கருஞ்சட்டை பேரணி மற்றும் மாநாடு!

Leave a Reply