உரிமைகளுக்காக போராடி வரும் ராயல் என்ஃபீல்ட் தொழிலாளர்களுக்கு மே பதினேழு இயக்கம் நேரில் ஆதரவு

கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தொழிலாளர் உரிமைகளுக்காக போராடி வரும் ராயல் என்ஃபீல்ட் தொழிலாளர்களுக்கு மே பதினேழு இயக்கம் நேரில் ஆதரவு. மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன் மற்றும் தோழர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

தொழிற்சங்க உரிமையினை வலியுறுத்தியும், 480 நாட்கள் முடித்த பயிற்சி தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்திட வலியுறுத்தியும், பயிற்சி முடித்து பணிநீக்கம் செய்யப்பட்ட 120 தொழிலாளர்களை மீண்டும் சேர்த்திட வலியுறுத்தியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள். அவர்களது நியாயமான கோரிக்கைகளை ஆதரித்து மே பதினேழு இயக்கத் தோழர்கள் நேற்று(02-11-2018)பங்கேற்றனர்.

தொழிலாளர் உரிமை மீட்பு போராட்டங்களின் அவசியம் குறித்தும், தொழிலாளர்களின் இந்த போராட்டத்திற்கு மே பதினேழு இயக்கமும் துணை நிற்கும் என்றும் தெரிவித்தனர்.

Leave a Reply