தமிழக கவர்னரே ஏழு நிரபராதி தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்

- in பரப்புரை

28 ஆண்டுகளாக செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடிய ஏழு நிரபராதி தமிழர்களின் வாழ்வில் இன்று கூடிய தமிழக அமைச்சரவை எடுத்த முடிவால் ஒரு வெளிச்சக்கீற்று ஏற்பட்டிருக்கிறது.

சட்ட விதி 161 படி அமைச்சரவையின் முடிவே இறுதியானது. அதை காலதாமதமின்றி நிறைவேற்றும் பொறுப்பு மட்டுமே ஆளுநருக்கு உண்டு. ஆகவே இதன் அடிப்படையில் தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வை பிரதிபலித்த தமிழக அமைச்சரவையின் உத்தரவை தமிழக ஆளுநர் உணர்ந்து இதில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லாமல் உடனடியாக ஏழு நிரபராதி தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மே 17 இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply