திருமுருகன் காந்தி விடுதலை கோரி நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம்

- in பரப்புரை

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தியும், UAPA எனும் கருப்பு சட்டத்தினை ஒழித்திட வலியுறுத்தியும் அரசு அடக்குமுறைக்கு எதிரான மாபெரும் பொதுக்கூட்டம் மே பதினேழு இயக்கம் சார்பில் 08-09-18 அன்று தி.நகர் முத்துரங்கன் சாலையில் நடத்தப்பட்டது.

ஆயிரக்கணக்கான இளைஞர்களும், பொதுமக்களும் உணர்வாளர்களும் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய எழுச்சியுடன் பங்கேற்றனர். ஏராளமான தோழர்கள் குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் வந்து கலந்து கொண்டனர்.

பாசிச பாஜக ஒழிக என்ற முழக்கத்தினை தோழர்கள் பலரும் முன்வைத்து பேசினர். ஏழு நிரபராதித் தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும் இசுலாமிய அரசியல் சிறைவாசிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

பங்கேற்று கண்டன உரையாற்றிய தோழமை அமைப்புகளின் பிரதிநிதிகள்:

திரு.தி.வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி
திரு.மல்லை சத்யா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்
திரு.அப்துல்சமது, மனிதநேய மக்கள் கட்சி,
திரு.ஆளூர் ஷானவாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி
திரு.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
திரு.அப்துல் ஹமீது, SDPI கட்சி
திரு.நாகூர் மீரான், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
திரு.கே.எம்.சரீப், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி
திரு.அரங்க குணசேகரன், தமிழக மக்கள் புரட்சிக் கழகம்
திரு.கி.வெங்கட்ராமன், தமிழ்த்தேசிய பேரியக்கம்
திரு.பொழிலன், தமிழக மக்கள் முன்னணி
திரு.நாகை திருவள்ளுவன், தமிழ்ப்புலிகள் கட்சி
திரு.குடந்தை அரசன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி
திரு.உமாபதி, திராவிடர் விடுதலை கழகம்
திரு.குமரன், தந்தை பெரியார் திராவிடர் கழகம்
திரு.ஆவல் கணேசன், தமிழர் தேசிய முன்னணி
திரு.சுந்தரமூர்த்தி, தமிழர் விடுதலை கழகம்
திரு.நவீன், தமிழர் விடியல் கட்சி
திரு.பிரவீன்குமார், மே பதினேழு இயக்கம்

Leave a Reply