திருமுருகன் காந்திக்கும் மே 17 இயக்கத்திற்கும் ஏன் இந்த நெருக்கடி ?

- in நீட்

திருமுருகன் காந்திக்கும் மே 17 இயக்கத்திற்கும் ஏன் இந்த நெருக்கடி: 

நீட் எனும் அநீதியை தேர்வு என்ற பெயரில் புகுத்தாதீர்கள். இது கிராமபுற மாணவர்களின் மருத்துவ கனவை தகர்த்துவிடுமென்றுதான் மே 17 இயக்கம் உட்பட பல்வேறு இயக்கங்கள் கட்சிகள் போராடின. ஆனால் இந்திய ஒன்றியத்தை ஆளும் பிஜேபி அரசு உயர்சாதி திமிருடன் நீட் எனும் தேர்வை புகுத்தியது. இதனால் கிராமபுற மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்திலுள்ள 22அரசு மருத்துவ கல்லூரிலுள்ள 2447 மருத்துவ இடங்களில் வெறும் நான்கே நான்கு இடங்கள் மட்டுமே அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு இந்த வருடம் கிடைத்திருக்கிறது. (பார்க்க இணைப்பை)

இதே 2016ஆம் ஆண்டு நீட் தேர்வு இல்லாமல் 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங்க் நடைபெற்றபோது அதில் 30 அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைத்திருக்கிறது. ஆகவே இந்த நீட் தேர்வினால் அரசு பள்ளி மாணவர்கள் கடுமையான பாதிக்கப்படிருக்கிறார்கள் என்பது தற்போது வெட்டவெளிச்சமாகியிருக்கிறது.

இதனால் தான் ஆரம்பம் முதலே மே 17 இயக்கமும் அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியும் இந்த நீட் எனும் அராஜக தேர்வுமுறையை எதிர்த்து வந்தோம். இந்த அநீதி தேர்வை புகுத்திய பிஜேபி அலுவலகம் மே 17 இயக்கத்தால் மேற்ச்சொன்ன காரணத்தால் தான் முற்றுகை இடப்பட்டது.

இப்படிப்பட்ட சூழலில் தோழர் திருமுருகன் காந்தியும் மே 17 இயக்கமும் வெளியில் இருந்தால் அரசு பள்ளி மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை எதிர்த்து மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்பார்களென்பதற்காகத் தான் தோழர் திருவின் மீது போலியான வழக்குகளை பல்வேறு மாவட்டங்களில் போட்டு அலைக்கழிக்கிறார்கள். மற்றும் மே 17 இயக்கத்திற்கு எந்த இடத்திலும் பேச அனுமதியை மறுத்து வருகிறார்கள். நீட் எனும் தேர்வை புகுத்திய பிஜேபி அலுவலகத்தை முற்றுகை இட்டார்களென்பதற்காக பத்திற்கும் மேற்பட்ட மே பதினேழு இயக்கத் தோழர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

Leave a Reply