அரசு துறைகளில் 24லட்சம் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருக்கும் மோடி அரசு 

அரசு துறைகளில் 24லட்சம் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருக்கும் மோடி அரசு 

2014இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்ற பிஜேபியின் பிரதமர் வேட்பாளர் மோடி. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலை வாய்ப்பினை அதிகரிப்போமென்று தேர்தல் வாக்குறுதியில் சொல்லியிருந்தார். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் அறிவித்த பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி நடவடிக்கையால் நாட்டில் சிறு குறு தொழில் செய்துகொண்டிருந்த பலர் தங்களது தொழிற்சாலைகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த தொழிற்சாலைகளை மட்டுமே நம்பியிருந்த கோடிக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்பினை இழந்தனர்.மேலும் புதிதாக எந்த வேலைவாய்ப்பினையும் உருவாக்காததால் பட்டதாரிகள் பல லட்சம் பேரும் வேலை கிடைக்காமல் இந்தியாவின் தெருக்களில் அலைந்து கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவில் வேலைவாய்ப்பின் நிலைமை இப்படியிருக்க நாடெங்குமிருக்கிற மத்திய மற்றும் மாநில அரசுகளிலுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் சுமார் 23.8லட்சம் இடங்கள் காலியாக நிரப்பப்படாமல் இருக்கின்ற என்று பிஜேபி அரசு நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்துள்ளது. அதில் அதிகபட்சமாக அடுத்த தலைமுறையினரை நல்லபடியாக உருவாக்கும் பொறுப்புகொண்ட ஆசிரியர் பணியிடங்களே 10லட்சம் நிரப்பப்படாமல் இருக்கின்றன. பார்க்க படம் 01.

நாடுமுழுவதும் வேலைவாய்ப்பின்மை தலை விரித்தாடும் சூழலில் இருக்கிற குறைந்தபட்ச வேலையையும் நிரப்பாமல் வைத்திருக்கும் மோடி அரசின் நோக்கமென்ன? ஒருவேளை மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து பொதுத்துறை நிறுவனங்கள் ஒவ்வொன்றையும் தனியாருக்கு தாரை வார்த்துக்கொண்டு வருகிறாரே ஒருவேளை மொத்தமாக தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டமோ?

ஒருவேளை மோடி அரசின் இந்த செயலுக்கு பின்னால் இப்படியான சதிகள் இருக்குமாயின் நாம் அதை முதலிலேயே எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது அவசியாமாகும். இல்லையென்றால் எதிர்காலத்தில் இந்தியாவில் அரசு என்ற ஒன்று இருக்கும் ஆனால் அரசு நிறுவனங்கள் என்ற ஒன்று காணாமல் போய்விடும்.

Leave a Reply