இரண்டாம் முறையாகவும் மே 17 இயக்கம் நடத்தவிருந்த சிலைகடத்தல் தொடர்பான பொது கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு

இரண்டாம் முறையாகவும் மே 17 இயக்கம் நடத்தவிருந்த சிலைகடத்தல் தொடர்பான பொது கூட்டத்திற்கு தமிழக அரசின் காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட திருடர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று சொல்லி முதல்முறை அனுமதி மறுத்த காவல்துறை, இந்தமுறை எத்தனை பேர் எத்தனை மாவட்டங்களில் எந்தெந்த வாகனங்களில் வருவீர்கள் என்று முன்னரே சொல்லவில்லை என்று மறுத்திருக்கிறது.

ஜனநாயக நாட்டில் பகிரங்கமான திருட்டை கண்டித்து கூட்டம் நடத்துவதற்கு கூட இத்தனை முறை தடைகள் வருகிறது என்றால் நடக்கும் ஆட்சி திருட்டு ஆட்சியோ என்றுதான் மக்கள் எண்ணுவார்கள்.

தமிழ்நாட்டின் தொன்மையான வரலாற்று ஆவணங்கள் திருடப்பட்டிருக்கிறது. அதை கண்டித்து ஜனநாயக வழியில் ஒரு அமைப்பு கூட்டம் நடத்துவதற்கு இவ்வளவு தடைகளை போடும் அரசும், அதன் காவல்துறையும் இதே இடத்தில் பார்ப்பனிய இந்துத்துவ அமைப்புகளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்புகூட பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்குகிறது என்றால் இங்கே ஆட்சி நடத்துபவர்கள் இந்துத்துவ கும்பல்களே என்பதும் மக்கள் முன் அம்பலமாகி வருகிறது.

மக்களின் போராடும் அடிப்படை உரிமைக்கு எதிரான இந்த பாசிச அணுகுமுறையை அனைத்து ஜனநாயக ஆற்றல்களும் கண்டிக்க வேண்டும்.

நீதிமன்றமும் பிற ஜனநாயக அமைப்புகளும் கருத்து சுதந்திரம், மற்றும் போராடும் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக நிகழும் இந்த ஒடுக்குமுறையை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். மதுரையில் மே 17 இயக்கத்திற்கு மட்டும் இது நான்காவது அனுமதி மறுப்பு. பல்வேறு ஜனநாயக அமைப்புகளின் அனுமதி மறுப்பையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும்.

தமிழ்நாட்டில் மொத்தமாக கருத்து சுதந்திரமும் போராடும் மக்களின் அடிப்படை உரிமையும் முடக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றம் தானாக முன்வந்து தலையிட இதைவிட வேறென்ன சூழல் வேண்டும்?,

ஊடகங்கள் இதை விவாதமாக்குவதை விட வேறென்ன கருத்து சுதந்திரத்திற்கு செய்துவிட முடியும்?

இத்தகைய அடக்குமுறைகளையும், தடைகளையும் எதிர்த்து தளராமல் போராடுவோம். நீதிமன்றத்தின் கதவுகளையும் தொடர்ச்சியாக தட்டுவோம் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம். ஜனநாயகத்தை பாதுகாக்கவும், நம் தொன்மை அறிவினையும், கலையையும் மீட்கும் இந்த போராட்டத்தில் மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும், சிற்பிகளும், ஓவியர்களும், இதர படைப்பாளிகளும் தோள்கொடுத்து நிற்க வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply