தோழர்  திரு பெ.மணியரசன் அவர்கள் தஞ்சையில் தாக்கப்பட்டதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தோழர்  திரு பெ.மணியரசன் அவர்கள் தஞ்சையில் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், தாக்கிவிட்டு ஓடிய மர்ம கும்பலை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் 12-6-18 அன்று நடைபெற்றது.

இதில் மே பதினேழு இயக்கத் தோழர்களும் பங்கேற்றனர். மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்று அறிவித்த காவல்துறை தோழர்களை கைது செய்தது. ஜனநாயகத்திற்கான இடைவெளி முற்றிலுமாக தமிழ்நாட்டில் முடக்கப்பட்டுக் கொண்டே வருகிறது என்பதையே இந்த நடவடிக்கை நமக்கு காட்டுகிறது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதைக் கூட அனுமதிக்க மறுக்கும் சூழல் என்பது அவசரநிலை காலத்தை நினைவூட்டுவதாகவே இருக்கின்றன.
கைது செய்யப்பட்ட தோழர்கள் இரவு விடுவிக்கப்பட்டனர்.

Leave a Reply