தோழர் வேல்முருகன் அவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மக்களுக்காக போராடிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தோழர் வேல்முருகன் அவர்களை தேசத்துரோக வழக்கில் கைது செய்ததைக் கண்டித்தும்,  அவரை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் கடலூரில் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் 8-6-2018 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் அனைத்து அமைப்புகள் மற்றும் கட்சிகளின் தலைவர்களும் பல்லாயிரக்கணக்கான தோழர்களும் பங்கேற்றனர். மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன் கண்டன உரையாற்றினார்.

Leave a Reply