ஸ்டெர்லைட் ஆலையினை அகற்றவும் தோழர் வேல்முருகன் விடுதலை செய்யக் கோரியும் திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடிக்காக போராடியதற்காக தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும்,
ஸ்டெர்லைட் ஆலையினை அகற்றக் கோரியும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளை கொலை வழக்கில் கைது செய்யவும் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் திண்டுக்கல்லில் மே பதினேழு இயக்கம் சார்பில் இன்று 3-6-18 நடைபெற்றது.

இதில் SDPI கட்சியின் மாவட்ட தலைவர் முகமது மற்றும் தோழர்கள், தமுமுக மாவட்ட துணை தலைவர் முஸ்தாக், நைனா முகமது, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் அமீன்,பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர செயலாளர் சம்சுதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர்கள், தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர்கள், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள்முருகன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

 

Leave a Reply