மக்கள் இயக்கங்களின் தோழர்களை கடத்தும் பாசிச அரசு

சிவகங்கை, ஆரியப்பட்டி, காரைக்குடி, திருபுவனம், கோவில்பட்டி, ஆலங்குளம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் 9 பேரை கடத்தி. அவர்களை தூத்துக்குடியில் பிடித்ததாக பொய் வழக்கினை பதிவு செய்ய காவல்துறை அவர்களை கடத்திச் சென்றுள்ளது.

இலங்கை அரசின் வெள்ளை வேன் கடத்தலைப் போன்ற ஒரு நடவடிக்கையில் தமிழக அரசின் காவல்துறை ஈடுபட்டுள்ளது. இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்களை உடனடியாக விடுதலை செய்.

ஜனநாயக சக்திகளே! இந்த அடக்குமுறையினை கண்டித்து குரல் எழுப்புங்கள்.

மக்கள் இயக்கங்களுக்கு எதிராக ஒரு அவசர நிலையினை பாஜகவின் அடியாளான எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஜனநாயக இயக்கங்களே இணைந்து நின்று பாசிச அரசின் அடக்குமுறைகளை கண்டிப்போம்.

– மே பதினேழு இயக்கம்

Leave a Reply