தோழர் வேல்முருகன் அவர்களின் கைதினைக் கண்டித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான வேல்முருகன் அவர்களின் கைதினைக் கண்டித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று 26-5-18 அன்று சென்னையில் நடத்தப்பட்டது.

தூத்துக்குடி படுகொலைக்கு எதிராக தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தி விட்டு, அந்த மக்களை சந்திக்க சென்ற வேல்முருகன் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருப்பதற்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு SDPI கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் தெகலான் பாகவி அவர்கள் தலைமை வகித்தார். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் கலந்து கொண்டார்.

ஸ்டெர்லைட் ஆலையினை மூட வலியுறுத்தியும், வேல்முருகன் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தியும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அனைத்து அமைப்புகளும் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் 29-5-18 செவ்வாய் அன்று மாலை 3 மணிக்கு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

Leave a Reply