அரச பயங்கரவாதத்திற்கு எதிரான பெரும் போராட்டத்தினை நடத்துவோம்

தமிழ்நாடு கடற்கரையை ஒட்டி சாகர்மாலா திட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் வரப் போகின்றன. ஸ்டெர்லைட் போராட்டத்தில் நாம் வெற்றி பெற்றால் அவர்கள் கடற்கரையில் இந்த அழிவுத் திட்டங்களைக் கொண்டுவர முடியாது. அதனால்தான் இந்த அரசு தூத்துக்குடியில் மூர்க்கமாக கொலை செய்கிறது. இந்த பகுதியை ராணுவமயமாக்கப் பார்க்கிறது. இந்த சண்டை தமிழர்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குமான சண்டை. உலகம் முழுதும் இருக்கக் கூடிய சர்வதேச ஜனநாயக இயக்கங்களை தொடர்பு கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தமிழர்களும், உலகம் முழுதும் ஈழத்தமிழர்களும், புலம் பெயர் தமிழர்களும் சர்வதேச இனமாய் ஒன்றாக எழுந்து நின்று இந்த அரச பயங்கரவாதத்திற்கு எதிரான பெரும் போராட்டத்தினை நடத்துவோம்.

 

– திருமுருகன் காந்தி, மே பதினேழு இயக்கம்

Leave a Reply