தூத்துக்குடி படுகொலைகளை கண்டித்து தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு போராட்டம்

தூத்துக்குடியில் இன்று அரசு மற்றும் காவல்துறை செய்து கொண்டிருக்கிற பச்சை படுகொலையை உடனடியாக நிறுத்திவிட்டு தூத்துக்குடியை விட்டு போலிஸ் வெளியேற சொல்லி மே17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் அங்கம் வகிக்கிற தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் அனைத்து தலைவர்களும் தலைமைச் செயலகம் சென்றிருந்தனர். அவர்களை சந்திக்கக் கூட தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வராமல் அலட்சியம் காட்டியுள்ளார். இதனால் அனைவரும் தற்போது (22-5-2018 ) தலைமைச் செயலகத்தின் உள்ளேயே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்தகட்டமாக இந்த பச்சை படுகொலையை இந்திய அரசின் தூண்டுதலில் செய்த எடப்பாடி பழனிச்சாமி இந்த பச்சை படுகொலைக்கு பொறுப்பேற்று உடனடியாக பதவி விலகக்கோரியும், ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட கோரியும் நாளை மறுநாள் 24.05.18 அன்று 3மணிக்கு தலைமை செயலகம் முற்றுகை தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பாக நடைபெறும்.

Leave a Reply