தமிழ்நாடு தூத்துக்குடிக்கு ஆதரவாக திரளட்டும்!

ஸ்டெர்லைட்டைக் காப்பாற்ற மக்களை கொலை செய்யத் துணிந்து விட்டது அரசு!

அயோக்கியத்தனமான ஒரு கார்ப்பரேட் கம்பெனியை காப்பாற்ற பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் அரசே, உன் காட்டுமிராண்டி நடவடிக்கையை நிறுத்து.

துப்பாக்கி சூடு நடத்திய காவல் அதிகாரிகள், தூத்துகுடி மாவட்ட கலெக்டரை கொலைக்குற்றத்தில் கைது செய்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்பட்ட மாவட்ட கலெக்டர், தூத்துக்குடி காவல்துறை ஆகியோரின் அராஜகத்தை எதிர்த்து முன்னேறும் மக்களுக்கு துணை நிற்போம். தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசின் அயோக்கியத்தனத்தை எதிர்த்து தமிழ்நாடு முழுதும் போராட்டங்களை முன்னெடுப்போம்.

மக்க்ள் திரள் போராட்டங்கள், கைக்கூலி அரசை கைப்பற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை தூத்துக்குடி மக்கள் தமிழகத்திற்கு சொல்லியிருக்கிறார்கள்.

கார்ப்பரேட்டுகளை விரட்ட, தமிழகமே துணிந்து நில்.

தமிழ்நாடு தூத்துக்குடிக்கு ஆதரவாக திரளட்டும்!

– மே பதினேழு இயக்கம்

Leave a Reply