தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை தடுத்து கைது செய்த எடப்பாடி அரசின் அடக்குமுறை

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை தடுத்து அனைவரையும் கைது செய்த எடப்பாடி அரசின் அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறோம்.

அடக்குமுறைகள் மூலமாக விடுதலைக் கனவினை ஒடுக்கி விட முடியாது. நினைவேந்தல் தமிழர்களின் பண்பாட்டு உரிமை. அதனை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. பாஜகவின் அடியாளாக செயல்படும் எடப்பாடி அரசு தமிழின விரோத அரசு என்பதை மீண்டும் ஒருமுறை நமக்கு சொல்லியிருக்கிறது.

சர்வதேச சட்டங்களை மீறி எதேச்சதிகாரத்துடன் செயல்படும் சட்ட விரோத எடப்பாடி அரசும், அதன் எஜமானனாக செயல்படும் இந்திய பாரதிய ஜனதா கட்சி அரசும் மக்களால் அகற்றப்படும். காங்கிரஸ், பாஜக இரண்டும் தமிழின விரோத சக்திகளே என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் அரசியல் இயக்கமாக வலிமை பெறுவதே இந்த அயோக்கிய கும்பலுக்கு அச்சத்தினை கொடுக்கும். தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வினை தமிழர் கடலில் தான் மே பதினேழு இயக்கம் நடத்தும். தமிழர் கடலை நோக்கி ஒவ்வொரு ஆண்டும் வருவோம். தமிழர் கடலை மீட்டெடுப்போம். தமிழர் கடலில் நினைவேந்தலை நடத்துவோம்.

– மே பதினேழு இயக்கம்

Leave a Reply