காவிரி உரிமை மீட்க சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

காவிரி உரிமை மீட்க மே பதினேழு இயக்கம் சார்பில், மே 2, 2018 புதன்கிழமை அன்று மாலை 4 மணியளவில், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் பல்வேறு தலைவர்களும் தோழர்களும் திரளாக பங்கேற்று காவிரி உரிமை மீட்க முழக்கங்கள் எழுப்பினர்.
இப்போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,
SDPI கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் தெகலான் பாகவி,
தமிழ்ப் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன்,
மக்கள் அரசு கட்சி தலைவர் வழக்கறிஞர் ரஜினிகாந்த்,
தந்தை பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்ட தலைவர் குமரன்,
திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி,
தமிழக மக்கள் முன்னணியின் வழக்கறிஞர் பாவேந்தன்,
காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர் தஞ்சை தமிழன்,
தமிழர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி,
தமிழர் விடியல் கட்சியின் செய்தி தொடர்பாளர் சைலேந்தர்,
தமிழக மக்கள் கழகத்தின் பொதுச் செயலாளர் கார்த்திக்,
தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் தோழர் லயோலா மணி மற்றும்
மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

Leave a Reply