சென்னையில் காவிரி உரிமை மீட்க நடைபெற்ற போராட்டம்

தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் காவிரி உரிமை மீட்க பல்வேறு இயக்கங்கள் மற்றும் கட்சிகள் பங்கேற்கும் போராட்டம் மெரீனாவில் தடை செய்யப்பட்டு தடுக்கப்பட்டதால், கடற்கரை அருகே உள்ள சேப்பாக்கம் சாலையில் எழுச்சியுடன் 28-4-2018 அன்று நடத்தப்பட்டது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் இந்த போராட்டத்தினை ஒருங்கிணைத்தார்.

இந்த போராட்டத்தினில் மே பதினேழு இயக்கம் பங்கேற்றது. மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கண்டன உரையாற்றினார்.

பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகளை சார்ந்த ஏராளமான தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும், இளைஞர்களும் பங்கேற்றனர்.

மெரீனாவினை அனைவரும் கூடி நிச்சயம் மீட்போம் என்று தோழர்கள் பேசினர்.தொடர்ச்சியான போராட்டங்கள் காவிரியை மீட்கும் வரை நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்

Leave a Reply