காவிரி உரிமை திருப்பூரில் கண்டனக் கூட்டம்

திருப்பூரில் காவிரி உரிமைக்காக கண்டனக் கூட்டம் மே பதினேழு இயக்கத்தினால் 15-4-18 அன்று திருப்பூரில் நடத்தப்பட்டது. 378 டி.எம்.சியே நமது கோரிக்கை என்றும் 177.25 ஆக குறைக்கப்பட்டதை ஏற்க முடியாது என்றும் விரிவான உரையினை தோழர்கள் நிகழ்த்தினர்.

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன்குமார் காவிரி விவகாரத்தில் தமிழர்களுக்கு வரலாற்று ரீதியாக தொடக்கம் முதற்கொண்டு நிகழ்த்தப்படும் அநீதிகள் குறித்து தரவுகள் மூலமாகவும், அரசியல் ரீதியாகவும் விளக்கினார். மே பதினேழு இயக்க தோழர்கள் பிரவீன் குமார், பாலாஜி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

 

Leave a Reply