மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் இந்திய ஒன்றியத்தின் பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்ப்பில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் கலந்துகொண்ட கருப்புக்கொடி காட்டும் போராட்டம் இன்று ( 12.04.18) வியாழக்கிழமை காலை 8மணிக்கு சென்னை ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையம் அருகில் நடைபெற்றது. இதில் மே17 இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவிண் தலைமையில் இயக்கத்தோழர்கள் கலந்து கொண்டனர்.

இதில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புகொடியும், கருப்பு பலூனை பறக்கவிட்டும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எதிர்ப்பு தெரிவித்த அனைத்து இயக்க மற்றும் கட்சி தோழர்களும் தற்போது கைதாகி தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

Leave a Reply