காவிரி உரிமை போராட்டத்தை மடைமாற்றும் IPL எதிர்த்து போராட்டம்

காவிரி உரிமை போராட்டங்களை மடை மாற்றும் IPL கிரிக்கெட் போட்டியை எதிர்த்து பெருந்திரள் ஒன்றுகூடல்  10-4-2018, அன்று மே 17 இயக்கம் சார்பாக சென்னை அண்ணாசாலையில் நடைபெற்றது. காவிரியில் தமிழரின் உரிமையை மறுக்கும் இந்திய அரசையும் உச்சநீதிமன்றத்தையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் மற்றும் தோழர்கள் ஏராளமானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். முழக்கங்கள் எழுப்பியவாறு பேரணியாக சென்று சாலையில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். போராடிய தோழர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்து பின்னர் விடுவித்தது

Leave a Reply