காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கண்டன பேரணி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய அரசைக் கண்டித்து வடசென்னை திருவொற்றியூரில் தமிழ்மக்கள் உரிமைக் கூட்டியக்கம் சார்பில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் பங்கேற்கும் கண்டனப் பேரணி 09-4-2018 அன்று மாலை நடைபெற்றது.

தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு தொடங்கிய பேரணி இறுதியில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து முடிக்கப்பட்டது.

இந்த பேரணியில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் மற்றும் தோழர்களும் பங்கேற்றனர்.

Leave a Reply