காவிரி உரிமை வென்றெடுக்க பத்திரிக்கையாளர் சந்திப்பு

காவிரி உரிமை வென்றெடுக்க பெரியாரிய- தமிழ்த்தேசிய-அம்பேத்கரிய- முற்போக்கு கட்சி-இயக்கங்கள் இணைந்து இன்று (04-04-2018) பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் மே பதினேழு இயக்கமும் பங்கேற்றது.

அதில் கீழ்காணும் மூன்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிட்டால்,

1) ஐ.பி.எல் கிரிகெட் சென்னையில் நடந்தால் மைதானத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்தப்படும்

2) தண்ணீரை தடுத்தால் நெய்வேலி மின்சாரத்தை அனுப்ப மாட்டோம் என வரும் 10ம் தேதி NLC முற்றுகை.

3) 10ம் தேதிக்கு மேலும் தீர்வு கிடைக்காவிட்டால் மத்திய அரசு அலுவலங்கள் தமிழ் நாட்டில் இயங்க கூடாது என மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடப்படும்.

இதில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply