காவிரி உரிமை – இந்திய அரசின் சாஸ்திரி பவன் முற்றுகை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் இந்திய அரசின் அலுவலகமான சாஸ்திரி பவன் இன்று மே பதினேழு இயக்கத்தினால் முற்றுகையிடப்பட்டது. இந்த போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடியல் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கழக தோழர்களும் பங்கேற்றனர்.

கர்நாடகா அணை கட்டுவதற்கு முன்பு வழங்கப்பட்ட 370 டி.எம்.சியே தமிழருக்கான நீதி என்று முழக்கமிட்டனர். உச்சநீதிமன்ற 177.25டி.எம்.சி வரை குறைத்து தமிழர்களுக்கு அநீதி இழைத்திருப்பதாகவும் கருத்து தெரிவித்தனர்.

காவிரி தண்ணீரை தர மறுக்கும் இந்திய அரசுக்கு தமிழனின் வரிப்பணம் எதற்கு என்றும், தமிழர்கள் வரிகொடா இயக்கம் நடத்துவோம் என்றும் தெரிவித்தனர்.

போராட்டத்தின் போது மோடியின் உருவப்படம் கொளுத்தப்பட்டது. சாஸ்திரி பவன் முன்பாக சாலையில் அமர்ந்து தோழர்கள் போராட்டத்தை நடத்தினர். தோழர்களை இழுத்துச் சென்று கைது செய்தது.

போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான தோழர்கள் நுங்கம்பாக்கம் அருகே உள்ள மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

 

Leave a Reply