தஞ்சாவூரில் ஓ.என்.ஜி.சி முற்றுகைப் போராட்டம்

காவிரி டெல்டாவினை பாலைவனமாக்கும் வகையில் எண்ணெய், எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டு வரும் ஓ.என்.ஜி.சியினை தமிழ்நாட்டை நாட்டு விரட்டுவோம் என்ற முழக்கத்துடன் ஓ.என்.ஜி.சி முற்றுகைப் போராட்டம் தஞ்சாவூரில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களினால் இணைந்து நடத்தப்பட்டது.

தோழர் கோ.திருநாவுக்கரசு அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்றது. மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன்குமார் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

முற்றுகையில் கலந்து கொண்ட தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் மண்ணை நாசமாக்க மீத்தேன்/ஹைட்ரோகார்பன், எரிவாயு, பெட்ரோலிய மண்டலம் என்ற பெயரில் நிகழ்த்தப்படும் சதிகளுக்கு எதிராக ஒன்றிணைவோம். ஓ.என்.ஜி.சி யினை விரட்டுவோம்.

Leave a Reply