தமிழகத்திலிருந்து ONGCயை விரட்டியடிக்க தஞ்சையில் ஒன்றுக்கூடுவோம்

தமிழகத்திலிருந்து ONGCயை விரட்டியடிக்க, நாளை தஞ்சையில் ஒன்றுக்கூடுவோம். ONGC முற்றுகைப்போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்கிறது.

ஒட்டுமொத்த தமிழகத்தையும் பாலைவனமாக்குவதற்கு காஞ்சிபுரம்- இராமநாதபுரம் வரையுள்ள காவேரி டெல்டா பகுதிகளில் எண்ணெய்/ எரிவாயு எடுப்பதற்காக துரப்பண பனிகளை மேற்கொள்ள இருக்கிறது ஒஎன்ஜிசி.

அதனது ஒருப்பகுதியாக தஞ்சை மாவட்ட ஒரத்தநாடு, பாபநாச வட்டங்களில் துரப்பன பணிகளை மேற்கொள்வதற்கான வேலைகளை ONGC தொடங்கிவிட்டது. தனது முதல் துரப்பன பணிக்காக அம்மாபேட்டை அருகிலுள்ள தீபாமாள்புரத்தில் குழாய்களை பதித்து எண்ணெய்/ எரிவாயு எடுக்கும் பணிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது, ONGC.

நாகை- கடலூர் மாவட்டங்கள் பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, அதையொட்டி செயற்படுத்தயிருக்கும் துரப்பன பணிகளுக்காக தனியார் பெரு நிறுவனங்களிடம் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ள நிலையில், காவேரி டெல்டாவை பாலைவனமாக்க வரப்போகும் லாப வெறி கொண்ட தனியார் யானைகளின், மணியோசையாக ONGC காவேரி டெல்டா பகுதிகளில் களமிறங்கியிருக்கிறது.

~ONGCயை விரட்டியடிக்கும் முற்றுகைப் போராட்டம்~
நாள்: 27.03.2018, செவ்வாய் காலை 10 மணி
இடம்: மருவத்தூர், அம்மாபேட்டை

அனைவரும் வாருங்கள்..
” ONGCயே தமிழகத்திலிருந்து வெளியேறு”

Leave a Reply