புதுச்சேரியில் காவிரி உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

*புதுச்சேரியில்**

காவிரி உரிமை மீட்பு பொதுக்கூட்டம்.

மார்ச் 18, ஞாயிறு மாலை 5 மணி,
பேருந்து நிலையம் எதிரில், சுதேசி மில் அருகில், புதுச்சேரி.

காவிரி உரிமையினை மீட்க பெரும் எழுச்சியுடன் திரள்வோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடாமல் தொடர்ந்து தமிழர்களை இந்திய அரசு வஞ்சித்து வருகிறது. இந்திய பாஜக அரசும், கர்நாடக காங்கிரஸ் அரசும், தேசிய கட்சிகளும் தொடர்ச்சியாக தமிழர்களை ஏமாற்றி வருகின்றன.

தமிழர் நிலத்தினை பாலைவனமாக்கும் இந்திய அரசின் சதித் திட்டத்தினை முறியடிப்போம். காவிரி நதிநீர் என்பது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வாழ் தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை.

காவிரி நதிநீரை தடுத்து, நமது விவசாயத்தை அழித்து, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நம் மண்ணிலிருந்து ஹைட்ரோகார்பன்/ மீத்தேனை உறிஞ்சி கொடுத்து, நிலக்கரி எடுத்து பாலைவனமாக மாற்ற முயலும் சதித்திட்டத்தினை முறியடிப்போம்.

நெடுவாசல், காரைக்கால், கதிராமங்கலம், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் அனைத்தும் நமது நிலம்.

காவிரி உரிமை மீட்டிட புதுச்சேரியில் கூடுவோம்.

அனைவரும் வாருங்கள்.


– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply