மகாராஷ்டிரா விவசாயிகளின் பேரணியும், மறைக்கப்படும் உண்மைகளும்.

மகாராஷ்டிராவில் 35,000க்கும் அதிகமான விவசாயிகளின் பேரணியும், மறைக்கப்படும் உண்மைகளும்:

கடந்த மார்ச்’06ஆம் தேதி 35,000க்கும் அதிகமான விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளுடன் நாசிக்கிலிருந்து பேரணியாக கிளம்பி சுமார் 180கிலோமீட்டர் நடந்தே மும்பை சட்டமன்றத்திற்கு வந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த செய்தியை திட்டமிட்டு பல்வேறு ஊடகங்கள் மறைத்தது அல்லது செய்தியை வெளியிட்டவர்கள் விவசாய கடனை இரத்து செய்யவேண்டுமென்பதற்காக மட்டுமே இவர்கள் பேரணியாக திரண்டார்கள் என்பது போல செய்தியை வெளியிட்டார்கள். மறந்தும் ஒரு ஊடகமும் மும்பை மாநில பிஜேபி அரசின் நிர்வாக தோல்வி குறித்து பேசவேயில்லை.

கடந்த நான்கு வருடமாக மகாராஷ்டிரா பிஜேபி முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் எனது அரசு விவசாயிகளுக்கான அரசு என்று சொல்லிக் கொண்டே இருந்தாரே ஒழிய விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. இறுதியாக மார்ச் 02ஆம் தேதி வெளியிட்ட பட்ஜெட்டில் மகாராஷ்டிர அரசின் நிதிச்சுமை சுமார் 4.61லட்சம் கோடி எனவே விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என்று முதல்வர் கைவிரித்துவிட்டார். http://indianexpress.com/…/maharashtra-budget-2017-debt-se…/

அதுபோக மலைகளிலுள்ள நிலங்களை விவசாயிகளுக்கு கொடுங்கள் என்று பல வருடங்களாக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும்போது சத்தமில்லாமல் அனைத்து நிலங்களையும் கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு விற்றிருக்கிறது மகாராஷ்டிரா மாநில பிஜேபி அரசு.

மேலும் மாநிலத்தில் நடைமுறையில் இருந்த தேசிய சுகாதார திட்டத்திற்கான நிதியை பெருமளவு குறைத்திருக்கிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 1760கோடியை தேசிய சுகாதாரத்திற்கென்று ஓதுக்கிய அரசு. இந்த வருடம் வெறும் 964கோடி மட்டுமே ஒதுக்கியது.45% குறைத்து விட்டது. அதே போல மகாத்மா பூலே பெயரிலானா (Mahatma Phule Jana Arogya Yojana) சுகாதாரத்திட்டத்திற்கும் கடந்த ஆண்டு 1316கோடி ஓதுக்கிய அரசு இந்தமுறை வெறும் 576கோடி மட்டுமே ஓதுக்கியது. இதனால் ஏழை எளிய விவசாய மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.

அதாடுமட்டுமில்லாமல் மகாராஷ்டிரா பிஜேபி அரசு 4000 அரசு பள்ளிகளை மாணவர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறதென்று சொல்லி இந்த வருடத்தில் மட்டும் மூடியிருக்கிறது. அதேநேரத்தில் தனியார்கள் கல்விநிலையங்களை திறக்க புதிய சட்டமசோதாவை நிறைவேற்றியிருக்கிறது. http://www.thehindu.com/…/assembly-clea…/article22103751.ece

அரசே கல்வி நிலையங்களை மூடியதால் ஏழை எளிய விவசாயிகளின் குழந்தைகள் பள்ளிபடிப்பை தொடர முடியாத சூழல் ஏற்பட்டது. தனியார் கல்வி நிலையங்களில் கட்டணம் அதிகமாக இருந்ததால் அதை கட்டும் திறன் விவசாயிகளுக்கு இல்லாமல் போய் பலாயிரம் பேர் பள்ளிபடிப்பை பாதியிலேயே நிறுத்தும் சூழல் உண்டானது.இப்படி விவசாயிகள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த மகாராஷ்டிரா மக்களையும் நான்கு வருடங்களாக
தாளாத சிக்கலில் வைத்த பிஜேபி அரசின்கொடுமை தாளாமல் தான் 35,000க்கும் அதிகமானோர் திரண்டிருக்கின்றனர். அவர்களுக்கு வழியெங்கும் மக்கள் ஆதரவு கொடுத்திருக்கின்றனர்.

Leave a Reply