சிரியா இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

சிரியா மக்களின் மீதான இனப்படுகொலையினை தடுத்த நிறுத்த வலியுறுத்தியும், அமெரிக்க, இரசிய அரசுகளை சிரியாவிலிருந்து வெளியேற்ற வலியுறுத்தியும், தெற்காசியா பிராந்தியத்திலிருந்தும், மேற்காசியா பிராந்தியத்திலிருந்தும் ஏகாதிபத்தியங்களை வெளியேற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், சிரியாவின் மீதான இனப்படுகொலை தமிழ்நாட்டிற்கு விடப்பட்ட எச்சரிக்கை என்பதை விளக்கும் வகையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் மே பதினேழு இயக்கம் சார்பில் சென்னை பல்லாவரத்தில் 4-3-2018 அன்று நடத்தப்பட்டது.
இப்போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள், இளையோர்கள், குடும்பத்தினரோடு பெற்றோர்களும் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் – விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் தோழர் ஆளூர் ஷாநவாஸ்,
மதிமுக காஞ்சி வடக்குமாவட்ட செயலாளர் தோழர் மகேந்திரன் மற்றும் மாநில இலக்கிய அணி துணைசெயலாளர் தோழர் காரை செல்வராஜ்,
தமிழக வாழ்வுரிமை கட்சி காஞ்சி மாவட்ட பொறுப்பாளர் தோழர் முருகன்,
எஸ்டிபிஐ கட்சியின் காஞ்சி மாவட்ட பொறுப்பாளர் தோழர் ஆதாம் ஜாகிர்,
மனித நேய ஜனநாயக கட்சி காஞ்சி மாவட்ட செயலாளர் தோழர் ஜிந்தா மஜார்,
மாந்தர் அமைப்பு தோழர் மலர் ,
புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் சீராளன்,
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட பொறுப்பாளர் தோழர் குமரன்,
மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர்
புத்தர் கலைக்குழு தோழர் மணிமாறன், எழுத்தாளர் கி.நடராசன், வழக்கறிஞர் குணசேகரன் உள்ளிட்ட தோழர்களும் போராட்டத்தில் பங்கேற்று தமது கண்டனத்தை பதிவு செய்தனர்

 

Leave a Reply