”தமிழர் உரிமை மீட்பு மற்றும் இயற்கை வள காப்பு” மாநாடு – மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் 23-2-2018 அன்று தமிழர் தேசிய முன்னணி சார்பில் ஐயா பழ.நெடுமாறன் அவர்களின் தலைமையில் ”தமிழர் உரிமை மீட்பு மற்றும் இயற்கை வள காப்பு” மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் டைசன், இளமாறன் மற்றும் அக்கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் ஆகியோருக்கும், பேராசிரியர் ஜெயராமன் அவர்களுக்கும் பாராட்டி சிறப்பு செய்யப்பட்டது.

மே பதினேழு இயக்கத்தின் சார்பாக தோழர் திருமுருகன் காந்தி உரையாற்றினார்.

முன்னதாக சீர்காழியில் தோழர்களுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Leave a Reply