வெல்லும் தமிழீழம்- தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு

வெல்லும் தமிழீழம்- தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு மே பதினேழு இயக்கம் சார்பில் 18-2-2018 அன்று  சென்னையில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது.

வெல்லும் தமிழீழம் தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாட்டின் முதல் அமர்வு

தமிழின உரிமைக்காக உயிர கொடுத்த அத்தனை ஈகியர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. புத்தர் கலைக்குழுவின் பறை இசையுடன் மாநாடு துவங்கியது. பின்னர் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி, கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்டோர் குத்து விளக்கினை ஏற்றி வைத்தனர்.

தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் விரிவாதிக்கக் கொள்கையும், தமிழீழ விடுதலையின் முக்கியத்துவமும் என்ற தலைப்பில் நடைபெற்ற முதல் அமர்வில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள்முருகன், கவிஞர் காசி ஆனந்தன, இயக்குநர் அமீர், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.செரீப், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி ஆகியோர் உரையாற்றினர்.
மாநாட்டில் ஏராளமான பொதுமக்களும், இளைஞர்களும், தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

வெல்லும் தமிழீழம் தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாட்டின் இரண்டாம் அமர்வு

வெல்லும் தமிழீழம் தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாட்டின் இரண்டாம் அமர்வு பகல் 12:00 மணியளவில் நடைபெற்றது.

முற்போக்கு ஜனநாயக அரசியலை வென்றெடுத்த தமிழீழ அரசியல் சாசனம் என்ற தலைப்பில் இந்த அமர்வு நடைபெற்றது. மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் லெனா குமார் அவர்கள் அமர்வு குறித்த துவக்க உரையாற்றினார்.

காஞ்சி மக்கள் மன்றம் தோழர் மகேசு, தமிழர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி, தமிழ்த்தேச மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தமிழ்நேயன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் உள்ளிட்டோர் விடுதலைப் புலிகளின் முற்போக்கு அரசியல் கட்டமைப்பினைப் பற்றியும், பெண் விடுதலையை முன்னெடுத்ததைப் பற்றியும், அவர்கள் சாதியத்தினை தண்டனைக்குரிய குற்றமாக உருவாக்கியதை குறித்தும் உரையாற்றினார்.

 3

வெல்லும் தமிழீழம் தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாட்டின் மூன்றாம் அமர்வு

வெல்லும் தமிழீழம் மாநாட்டின் மூன்றாம் அமர்வு 02:30 மணியளவில் நடைபெற்றது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சமூக நீதியும், தமிழ்நாட்டின் எதிர்வினையும் என்ற தலைப்பில் இந்த அமர்வு நடைபெற்றது. மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் புருசோத்தமன் இந்த அமர்வுகுறித்த தொடக்க உரையை ஆற்றினார். தமிழீழ விடுதலைப்போராட்டம் மற்றும் புலிகளின் சமூக நிதியைப் பற்றி இளைஞர் இயக்க ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் எழிலன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், இயக்குநர் பிரம்மா, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டைசன், கேரளாவைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் கே.பி.சசி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் நிலவழகன், இயக்குநர் கரு.பழனியப்பன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத் தலைவர் அரங்க குணசேகரன் ஆகியோர் உரையாற்றினர்.

வெல்லும் தமிழீழம் – தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாட்டின் மாலை அமர்வு

வெல்லும் தமிழீழம் – தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாட்டின் மாலை அமர்வு மாலை 6 மணியளவில் தொடங்கியது. இந்த அமர்வு தமிழீழ விடுதலைக்கான அரசியல் நகர்வுகளும் நம் உடனடிக் கடமைகளும் என்ற தலைப்பின் கீழ் நடைபெற்றது.

மாலை அமர்வு புத்தர் கலைக்குழு தோழர்களின் பறை இசையுடன் துவங்கியது. இதில் மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, SDPI கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் பாலாஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். மேலும் Countercurrents.com ஊடகத்தின் ஆசிரியர் பினு மாத்திவ், மணிப்பூர் சட்டத்துறை பேராசிரியர் மாலெம் மங்கள், டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தின் மணிப்பூர் மாணவர் அமைப்பின் துணைத் தலைவர் யூரெம்பா முடும் ஆகியோரும் தமிழீழத்தின் விடுதலையையும், சுய நிர்ணய உரிமையையும் ஆதரித்து பேசினர். சுவிட்சர்லாந்தின் தமிழீழ செயல்பாட்டாளர் லதன் சுந்தரலிங்கம், வடக்கு மாகாண சபை உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம், இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் காணொளி செய்தியை அனுப்பியிருந்தனர். வடக்கு மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் அறிக்கையினை அனுப்பியிருந்தார்.

Leave a Reply