வெல்லும் தமிழீழம்-மாநாடு குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு

”வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு பற்றி விளக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று 10-2-2018 காலை சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது.

மலேசியாவின் பினாங்கு மாகாணத்தின் துணை முதல்வரான திரு.ராமசாமி அவர்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

தமிழீழத்திலிருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளார்கள். இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்த ஜனநாயக சக்திகள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்களும் கலந்து கொள்கின்றனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழீழ ஆதரவு கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

திரைத்துறையினர், கலைஞர்கள், பேராசிரியர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொள்கிறார்கள்.

இந்த மாநாட்டில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென பத்திரிக்கையாளர் சந்திப்பில் மே பதினேழு இயக்கம் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டது. மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி, தோழர் லெனா குமார், தோழர் பிரவீன் குமார் உள்ளிட்டோர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.

Leave a Reply