பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், உடனடியாக அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 3-2-2018 மாலை 4 மணியளவில் மே பதினேழு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசின் ஊழல்களாலும் நிர்வாக சீர்கேட்டாலும் ஏற்பட்ட நட்டத்தை கட்டண உயர்வு மூலம் மக்களின் மீது சுமத்தாதே. சேவைத்துறையாக இயங்க வேண்டிய போக்குவரத்து துறையில் லாப நட்ட கணக்கு பார்க்காதே என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன், திராவிடர் விடுதலை கழக தோழர் தபசி குமரன், தமிழர் விடியல் கட்சி தோழர் இளமாறன், தமிழர் விடுதலை கழக தோழர் சுந்திரமூர்த்தி, மாணவர் கூட்டமைப்பு தோழர் லயோலா மணி, மே பதினேழு இயக்க தோழர்கள் பாலாஜி மற்றும் பிரவீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்

– மே பதினேழு இயக்கம்

9884072010

Leave a Reply